தமிழ்நாடு

புதுச்சேரியில் உலக கடற்கரை தூய்மை தினம் கடைப்பிடிப்பு

18th Sep 2021 11:19 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரி: புதுச்சேரி அருகே அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம் சனிக்கிழமை காலை, மணவெளி தொகுதிக்குட்பட்ட புதுக்குப்பம் கடற்கரை கிராமத்தில் நடைபெற்றது.

உலக கடற்கரை தூய்மை தினத்தையொட்டி நடைபெற்ற கடற்கரை தூய்மைப்படுத்தும் பணியினை புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் ஆர். செல்வம் தொடங்கி வைத்து, குப்பைகளை சேகரித்து அகற்றினார்.

கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், இளநிலைப் பொறியாளர் சரஸ்வதி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து கடற்கரையில் தேங்கிக் கிடந்த பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை அகற்றி தூய்மைப் படுத்தினர்.

ADVERTISEMENT

Tags : World Beach Cleanup Day புதுச்சேரி உலக கடற்கரை தூய்மை தினம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT