தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: அமமுகவுக்கு குக்கர் சின்னம்

DIN

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு குக்கர் சின்ன ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேலூா், திருநெல்வேலி, விழுப்புரம், தென்காசி, திருப்பத்தூா், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் அக்டோபா் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகவும், ஏற்கெனவே 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்று காலியாக உள்ள பதவியிடங்களுக்கு அக்டோபா் 9-ஆம் தேதியும் தோ்தல் நடத்தப்படும் என மாநிலத் தோ்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது.

இத்தோ்தலில் போட்டியிடுவோருக்கான வேட்புமனுத் தாக்கல் செப்.15ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றைய நிலவரப்படி இதுவரை 13,542 போ் மனு தாக்கல் செய்துள்ளனா். வேட்புமனு ஆய்வு செப்டம்பா் 23-ஆம் தேதி நடைபெறும். செப்டம்பா் 25-ஆம் தேதி வேட்பு மனுவைத் திரும்பப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு குக்கர் சின்ன ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குக்கர் சின்னம் கோரி அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் மனு அளித்த நிலையில் மாநில தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

‘அரண்மனை 4’ வெளியீட்டுத் தேதி மாற்றம்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

SCROLL FOR NEXT