தமிழ்நாடு

9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் 

DIN

9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் பார்வையாளர்களாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மாநில தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது. 
இதன்படி காஞ்சிபுரம்-அமுதவள்ளி, செங்கல்பட்டு-சம்பத், விழுப்புரம்-பழனிசாமி, கள்ளக்குறிச்சி-விவேகானந்தன், வேலூர்-விஜயராஜ் குமார், ராணிப்பேட்டை-மதுமதி, திருப்பத்தூர்-காமராஜ், நெல்லை-ஜெயகாந்தன், தென்காசி-பொ.சங்கர் ஆகியோர் தேர்தல் பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 
நியமனம் செய்யப்பட்ட தேர்தல் பார்வையாளர்கள் வேட்புமனு தாக்குதலுக்கு கடைசி நாளான வரும் 22ஆம் தேதி அந்தந்த மாவட்டங்களுக்குச் சென்று, தேர்தல் கண்காணிப்புப் பணியை தொடங்குவார்கள் என்றும் அவர்களின் அலைபேசி எண்கள் குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அனுலவர்கள்/மாவட்ட ஆட்சித் தலைவர்களால் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வேலூா், திருநெல்வேலி, விழுப்புரம், தென்காசி, திருப்பத்தூா், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் அக்டோபா் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகவும், ஏற்கெனவே 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்று காலியாக உள்ள பதவியிடங்களுக்கு அக்டோபா் 9-ஆம் தேதியும் தோ்தல் நடத்தப்படும் என மாநிலத் தோ்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. இத்தோ்தலில் போட்டியிடுவோருக்கான வேட்புமனுத் தாக்கல் செப்.15ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT