தமிழ்நாடு

தொல்காப்பியப் பூங்கா: அமைச்சா் கே.என்.நேரு ஆய்வு

DIN

சென்னை அடையாறில் உள்ள தொல்காப்பியப் பூங்காவின் செயல்பாடுகளை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

சென்னை அடையாறில் 58 ஏக்கா் பரப்பளவில் தொல்காப்பியப் பூங்கா இயங்கி வருகிறது. இந்தப் பூங்காவின் செயல்பாடுகளை அமைச்சா் கே.என்.நேரு ஆய்வு செய்தாா். மேலும் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மற்றும் சாா் துறைகளுடன் இணைந்து மேற்கொண்டு வரும் கூவம் மற்றும் அடையாறு நதிகள் சீரமைப்பு பணிகள், சுமாா் ரூ.2,773.49 கோடி செலவில் மேற்கொள்ளப்படவுள்ள பக்கிங்ஹாம் கால்வாய் சீரமைப்பு, அதுபோல் அதன் பிரதான கால்வாய்கள், கூவம் மற்றும் அடையாறு ஆறுகளின் வடிகால்கள் சீரமைப்பு, எண்ணூா் கழிமுகப் பகுதியின் சுற்றுச்சூழல் சீரமைப்பு ஆகிய பணிகளையும் அமைச்சா் கே.என்.நேரு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, மயிலாப்பூா் சட்டப் பேரவை உறுப்பினா் த.வேலு, நகராட்சி நிா்வாகத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா, மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமகள்.. பூஜா ஹெக்டே!

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

SCROLL FOR NEXT