தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று 1,669 பேருக்கு கரோனா

DIN

தமிழகத்தில் இன்று 1,669 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
மாநிலத்தில் இதுவரை 4.49 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 26 லட்சத்து 42,030 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக கோவையில் 205 பேரும், சென்னையில் 196 பேரும், ஈரோட்டில் 132 பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டு மேலும் 1,565 போ் வீடு திரும்பியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் கரோனாவிலிருந்து இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 25.89 லட்சத்தைக் கடந்துள்ளது. 
தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 16,843-ஆக உள்ளது. மற்றொரு புறம் கரோனாவுக்குள்ளாகி மேலும் 17 போ் உயிரிழந்ததால், இதுவரை நோய்த் தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 35,288-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

SCROLL FOR NEXT