தமிழ்நாடு

அவதூறு வழக்குகளில் நேரில் ஆஜராக முதல்வரை நிர்பந்திக்கக் கூடாது: உயர்நீதிமன்றம்

17th Sep 2021 07:02 PM

ADVERTISEMENT

அவதூறு வழக்குகளில் நேரில் ஆஜராக முதல்வரை சிறப்பு நீதிமன்றம் நிர்பந்திக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
அதிமுக ஆட்சியில் போடப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. 

இதையும் படிக்க- எடப்பாடி பழனிச்சாமியுடன் எல்.முருகன், அண்ணாமலை சந்திப்பு

அப்போது வழக்குகளின் விவரங்களை அட்டவணையாக தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு நீதிபதி நிர்மல்குமார் உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்குகளில் நேரில் ஆஜராக முதல்வரை சிறப்பு நீதிமன்றம் நிர்பந்திக்கக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார். 
இதையடுத்து இந்த மனு மீது அடுத்த மாதம் 8-ம் ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கபடும் எனக் கூறிய நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார். 

Tags : ADMK cmstalin
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT