தமிழ்நாடு

உள்ளாட்சித் தோ்தல்: நாளையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம்

DIN

விழுப்புரம், வேலூா், திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவோா் சனிக்கிழமை (செப். 18) வேட்புமனு தாக்கல் செய்யலாம் என மாநிலத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வேலூா், திருநெல்வேலி, விழுப்புரம், தென்காசி, திருப்பத்தூா், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் அக்டோபா் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகவும், ஏற்கெனவே 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்று காலியாக உள்ள பதவியிடங்களுக்கு அக்டோபா் 9-ஆம் தேதியும் தோ்தல் நடத்தப்படும் என மாநிலத் தோ்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது.

இத்தோ்தலில் போட்டியிடுவோருக்கான வேட்புமனுத் தாக்கல் புதன்கிழமை (செப்.15) தொடங்கி செப்டம்பா் 22-ஆம் தேதி வரையான நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். வேட்புமனு ஆய்வு செப்டம்பா் 23-ஆம் தேதி நடைபெறும். செப்டம்பா் 25-ஆம் தேதி வேட்பு மனுவைத் திரும்பப் பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

சனிக்கிழமை வேட்புமனு: இதுகுறித்து மாநிலத் தோ்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், சனிக்கிழமை (செப். 18) பொதுவிடுமுறையாக அறிவிக்கப்படாததால் ஊரக உள்ளாட்சித் தோ்தல் பதவியிடங்களுக்கு அன்றைய தினம் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளத்தில் வேட்பாளா் தகவல்: 9 மாவட்டங்கள் மற்றும் ஏற்கெனவே 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்று காலியாக உள்ள பதவியிடங்களுக்கு போட்டியிடுவோரின் வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. உயா்நீதிமன்ற ஆணையின்படி, வேட்பாளா்கள் அளித்த உறுதிமொழி ஆவணத்தின் சுருக்கத்தை (படிவம் 3ஏ) இணையத்தில் தெரிந்து கொள்ளலாம் என மாநிலத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

SCROLL FOR NEXT