தமிழ்நாடு

பதிவுத்துறையில் வருவாய் அதிகரிப்பு: அமைச்சர் பி.மூர்த்தி தகவல்

17th Sep 2021 10:13 PM

ADVERTISEMENT

பதிவுத்துறையில் வருவாய் அதிகரிப்பு வருவதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பதிவுத்துறையில் 01.04.2021 முதல் 16.09.2021 வரையிலான காலத்தில் ரூ.5,388.87 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் ஈட்டப்பட்ட வருவாய் ரூ.3,052.87 கோடியுடன் ஒப்பிடும்பொழுது, இந்த ஆண்டு ரூ.2020.81 கோடி அதிகமான வருவாய் பதிவுத்துறையில் ஈட்டப்பட்டுள்ளது. பதிவுத்துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய மாற்றங்களின் விளைவாக இத்துறையால் ஈட்டப்படும் வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிதி ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் வருவாய் குறைந்து இருந்த போதிலும் வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சரின் சீரிய முயற்சிகளின் காரணமாக அடுத்து வந்த மாதங்களில் வருவாய் சரிசெய்யப்பட்டு 16.9.2021 வரை ஈட்டப்பட்டுள்ள வருவாயானது பேரிடர் ஏதும் இல்லாத இயல்பு நிலை காலத்திற்கான வருவாயை விட அதிகரித்துள்ளது பதிவுத்துறையின் சாதனையாகும்.

இதையும் படிக்க- உள்ளாட்சித் தோ்தல்: இதுவரை 13,542 போ் வேட்புமனு தாக்கல்

மேலும் வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் சார்பதிவக எல்லைகள் பொதுமக்களின் வசதிக்கு ஏற்ப சீரமைக்கப்படும் என சட்டசபையில் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து அதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தங்கள் பகுதியில் சீரமைப்பட வேண்டிய சார்பதிவக எல்லைகள் குறித்த தகவல்களை அந்தந்த மாவட்ட பதிவாளர்களுக்கு எழுத்து மூலமாக பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Tags : Minister PMoorthy
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT