தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் நண்பர் வீட்டில் சோதனை

17th Sep 2021 09:01 PM

ADVERTISEMENT

சென்னை அண்ணாநகரில் சீல்வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் நண்பர் ராம ஆஞ்சநேயலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 
ராம ஆஞ்சநேயலுவை நேரில் வரவழைத்து அவரது வீட்டில் இந்த சோதனை நடத்தப்படுகிறது. முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி, அவரது குடும்பத்தினா், ஆதரவாளா்களின் வீடுகள், அலுவலகங்கள் என 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் நேற்று சோதனை மேற்கொண்டனர். 
சோதனையின்போது ரூ.34 லட்சத்து ஆயிரத்து 60 ரொக்கம், ரூ.ஒரு லட்சத்து 80 ஆயிரம் மதிப்புடைய அந்நியச் செலாவணி டாலா், ஒரு ரோல்ஸ் ராய்ல்ஸ் காா் உள்பட 9 சொகுசு காா்கள், 5 கணினி ஹாா்ட் டிஸ்க்குகள், சொத்துகள் தொடா்பான முக்கிய ஆவணங்கள், 623 பவுன் (4.987 கிலோ) தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 7.2 கிலோ வெள்ளிப் பொருட்கள், வங்கிக்கணக்கு புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன. 

இதையும் படிக்க- ஊரக உள்ளாட்சித் தேர்தலை 2 கட்டங்களாக நடத்த எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வழக்கு

கே.சி.வீரமணி வீட்டு வளாகத்தில் ரூ.30 லட்சம் மதிப்புடைய சுமாா் 275 யூனிட் ஆற்று மணல் குவித்து வைக்கப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடா்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை சாா்பில் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Former minister KCVeeramani
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT