தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சித் தேர்தலை 2 கட்டங்களாக நடத்த எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வழக்கு

DIN

ஊரக உள்ளாட்சித் தேர்தலை 2 கட்டங்களாக நடத்த எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

தமிழகத்தின் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தலை நடத்துவது தொடா்பாக தொடரப்பட்ட வழக்கில் செப்டம்பா் 15-ஆம் தேதிக்குள் ஊரக உள்ளாட்சித் தோ்தலை நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து வேலூா், திருநெல்வேலி, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் அக்டோபா் 6, 9-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவும், அதைத் தொடா்ந்து அக்டோபா் 12-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று மாநிலத் தோ்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை 2 கட்டங்களாக நடத்த எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

மனுவில், சட்டமன்ற தேர்தல் ஒரேகட்டமாக நடத்தப்பட்ட நிலையில் உள்ளாட்சித் தேர்தலை 2 கட்டங்களாக நடத்தக்கூடாது என்றும் 2 கட்டங்களாக தேர்தலை நடத்துவது கள்ள ஓட்டு போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதேசமயம் செப்.14-ல் தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி அளித்த மனுவை பிரிசீலிக்கக் கோரி தொடுத்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு: வெறிச்சோடிய சென்னை மாநகரம்

எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் விளக்கு எரிந்ததாக புகாா்: வாக்குச்சாவடி முகவா்கள் தா்னா

வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு: நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தா்னா

சென்னையில் அமைதியான வாக்குப்பதிவு: காவல் ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா் பேட்டி

இன்று திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

SCROLL FOR NEXT