தமிழ்நாடு

சிவகாசி: படுத்துக்கொண்டே சாப்பிட்டதால் தொண்டையில் நிலக்கடலை சிக்கி கூர்க்கா சாவு

16th Sep 2021 12:53 PM

ADVERTISEMENT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வியாழக்கிழமை படுத்துக்கொண்டே நிலக்கடலை சாப்பிட்டபோது தொண்டையில் கடலை சிக்கியதில் மூச்சுத்திணறி கூர்க்கா உயிரிழந்தார்.

சிவகாசி வட்டம் விஸ்வநத்தம் ஊராட்சி காமராஜ் நகரில் ஒரு வாடகை வீட்டில் கரண்சிங்(35) என்பவர் வசித்துவந்தார். இவர் விஸ்வநத்தம் பகுதியில் கூர்க்கா பணியில் இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில் இவர் சம்பவத்தன்று படுத்துக்கொண்டே நிலக்கடலை சாப்பிட்டுள்ளார். அப்போது நிலக்கடலை எதிர்பாராதவிதமாக தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டது. 

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ADVERTISEMENT

இதுகுறித்து அவரது உறவினர் அளித்த புகாரின் பேரில் சிவகாசி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதையும் படிக்க | அதிகாரம் செலுத்தும் பழக்கத்தை குழந்தைகளிடம் வளர்க்கிறதா 'அலெக்ஸா'?

ADVERTISEMENT
ADVERTISEMENT