தமிழ்நாடு

ஊத்துக்கோட்டை அருகே தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

16th Sep 2021 03:41 PM

ADVERTISEMENT

ஊத்துக்கோட்டை அருகே தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. 

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த எல்லாபுரம் ஒன்றியம் பட்ட செஞ்சி நகரம் பகுதியில் அவார்டு தனியார் தொண்டு நிறுவனமும் யுனிவர்சல் யூகேப் தொண்டு நிறுவனமும் இணைந்து அப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்களின் வருங்கால சந்ததிகள் பயன்பெறும் வகையில் ஐந்து வகையான மரக்கன்றுகளை நடும் பணியினை மேற்கொண்டது. 

சீனி குப்பம், ஓடக்கரை, செஞ்சி அகரம் பகுதிகளில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பொதுமக்களின் துணையுடன் ஐந்து வகைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. 

ADVERTISEMENT

இந்த நிகழ்வுக்கு செஞ்சி அகரம் ஊராட்சி மன்றத் தலைவர் காட்டாம்மாள் லோகநாதன் தலைமை தாங்கினார். தொண்டு நிறுவன இயக்குனர் கல்யாணி மற்றும் டாக்டர் பூபேஷ் குப்தா, முத்துக்கண்ணன் உள்ளிட்டோர் பங்குபெற்றனர்.

Tags : Uthukottai ஊத்துக்கோட்டை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT