தமிழ்நாடு

பெரியாரின் 143வது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் நாளை மரியாதை

16th Sep 2021 07:34 PM

ADVERTISEMENT

பெரியாரின் 143ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மரியாதை செலுத்துகிறார்.
இதுகுறித்து சென்னை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நே.சிற்றரசு வெளியிட்ட அறிக்கையில், பெரியாரின் 143வது பிறந்த நாளை முன்னிட்டு 17.9.2021 அன்று காலை 10.00 மணிக்கு அண்ணா சாலை, சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட கழக முன்னணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.

இதையும் படிக்க- தமிழகத்தில் இன்று மேலும் 1,693 பேருக்கு கரோனா

இது கரோனா காலம் என்பதால், பெருங்கூட்டமாக கூட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT