தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: மதிமுகவில் பொறுப்பாளர்கள் நியமனம்

16th Sep 2021 04:01 PM

ADVERTISEMENT

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: மதிமுக சார்பில் பொறுப்பாளர்கள் நியமனம்
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு பொறுப்பாளர்களை நியமனம் செய்து மதிமுக பொதுச் செயலர் வைகோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், 
அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெறும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்துச் செயலாற்ற மறுமலர்ச்சி தி.மு.க. தலைமைக் கழகப் பொறுப்பாளர்களாக கீழ்க்கண்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். தொடர்புடைய 9 மாவட்டச் செயலாளர்கள் ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்த அனைத்து நடைமுறைகளுக்கும் தலைமைக் கழகப் பொறுப்பாளர்களைத் தொடர்புகொண்டு தேர்தல் பணியாற்ற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அ.கணேசமூர்த்தி எம்.பி.,
மல்லை சத்யா, துணைப் பொதுச்செயலாளர்
டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், ஆட்சிமன்றக்குழுச் செயலாளர்
     1. காஞ்சிபுரம் மாவட்டம்
      2. செங்கல்பட்டு மாவட்டம்
      3. வேலூர் மாவட்டம்
      4. திருப்பத்தூர் மாவட்டம்
      5. இராணிப்பேட்டை மாவட்டம்

வழக்கறிஞர் கு.சின்னப்பா எம்.எல்.ஏ.,
ஏ.கே.மணி, துணைப் பொதுச்செயலாளர்
மு.செந்திலதிபன், அரசியல் ஆய்வு மையச் செயலாளர்
       6. விழுப்புரம் மாவட்டம்
       7. கள்ளக்குறிச்சி மாவட்டம்

டாக்டர் தி.சதன்திருமலைக்குமார் எம்.எல்.ஏ.,
புதூர் மு.பூமிநாதன் எம்.எல்.ஏ.,
புலவர் சே.செவந்தியப்பன், அரசியல் ஆலோசனைக்குழுச் செயலாளர்
டாக்டர் ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் எம்.எல்.ஏ.,
       8. திருநெல்வேலி
       9. தென்காசி 
இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Tags : mdmk Vaiko
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT