தமிழ்நாடு

சென்னையில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டோர் முழு புள்ளி விவரம்

16th Sep 2021 02:32 PM

ADVERTISEMENT


சென்னை: சென்னையில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது, பல்வேறு சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை மாநகரத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் முழு புள்ளி விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் நேற்று வரை ஒட்டுமொத்தமாக 46,32,776 பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். அதில் செப்டம்பர் 15ஆம் தேதி மட்டும் 13,271 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

இவர்களில் கோவிஷீல்டு தடுப்பூசியை முதல் தவணையாக 24,21,181 பேரும், 2வது தவணையாக 10,54,687 பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 34.75 லட்சம் பேர் கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT

கோவாக்சின் தடுப்பூசியை முதல் தவணையாக 6,94,659 பேரும், இரண்டாவது தவணையாக 4,62,249 பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 11,56,908 பேர் கோவாக்சின் செலுத்திக் கொண்டுள்ளனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT