தமிழ்நாடு

மத்திய அரசைக் கண்டித்து செப்.20-ல் தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் போராட்டம்

16th Sep 2021 10:23 PM

ADVERTISEMENT

மத்திய அரசைக் கண்டித்து செப்.20-ல் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் 20.08.2021 அன்று நடைபெற்ற இந்திய அளவிலான எதிர்கட்சித் தலைவர்கள் பங்கேற்ற காணொலிக் கூட்டத்தில், “மூன்று வேளாண் சட்டங்களை இரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல் - டீசல் - சமையல் எரிவாயு விலை உயர்வு தொடருவது, விலைவாசி உயர்வு, பொருளாதார சீரழிவு, தனியார்மயமாக்கல், வேலை இல்லாத் திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பிகாசஸ் ஒட்டுக் கேட்பு” உள்ளிட்ட மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத - ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து நாடு முழுவதும் செப்டம்பர் 20 முதல் 30ம் தேதி வரை பல்வேறு போராட்டங்களை நடத்துவது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

இதையும் படிக்க- வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் ஆப்கன் தூதர்கள்

அதன்படி மத்திய பா.ஜ.க. அரசின் செயல்களைக் கண்டித்து திமுகவின் தலைமையிலான அனைத்து கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும், மாநிலம் முழுவதும் 20-09-2021 (திங்கட்கிழமை) அன்று காலை 10.00 மணி அளவில், தங்களின் இல்லம் முன்பு கருப்புக் கொடி ஏந்தி கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டிட வேண்டும்” என கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. தலைமையிலான அனைத்துக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் விடுத்த அறிக்கையின்படி; நமது கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, வட்ட, பேரூர், ஊராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள, நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தோழர்களுடன் இணைந்து 20-09-2021 (திங்கட் கிழமை) அன்று காலை 10.00 மணி அளவில் தங்களின் இல்லம் முன்பு கருப்புக் கொடி ஏந்தி கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டிட வேண்டும் என்றும்; மாவட்டக் செயலாளர்கள்/பொறுப்பாளர்கள் தத்தமது மாவட்டத்தில் உள்ள கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி, மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத - ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து நடைபெறும் இக்கண்டனப் போராட்டத்தைச் சிறப்பாக நடத்திட ஏற்பாடு செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT