தமிழ்நாடு

திமுக முப்பெரும் விழா: கட்சிக்காக உழைத்தவர்களுக்கு விருது வழங்கிய ஸ்டாலின்

15th Sep 2021 07:04 PM

ADVERTISEMENT

 

திமுக முப்பெரும் விழாவில் கட்சிக்காக உழைத்த முன்னோடிகளுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

அண்ணா அறிவாலயத்தில் சமூக இடைவெளியுடன் முப்பெரும் விழா நடத்தப்பட்டது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக பேரிடா் காலக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து, காணொலி வாயிலாக முப்பெரும் விழா நடத்தப்பட்டது.

முப்பெரும் விழாவில் கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு வழங்கப்படும் விருதுகளான பெரியாா் விருது ‘மிசா’ பி. மதிவாணனுக்கும், அண்ணா விருது பேரவை முன்னாள் உறுப்பினா் எல். மூக்கையாவுக்கும், கலைஞா் விருது முன்னாள் பேரவை உறுப்பினா் கும்முடிப்பூண்டி கி. வேணுவுக்கும், பாவேந்தா் விருது வாசுகி ரமணனுக்கும், பேராசிரியா் விருது சட்டப் பேரவை முன்னாள் கொறடா பா. மு.முபாரக் ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.
 

ADVERTISEMENT

Tags : DMK Stalin award முப்பெரும் விழா
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT