தமிழ்நாடு

மாணவர்களுக்கு கரோனா: கோவையில் செப். 17 முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் 

15th Sep 2021 10:02 PM

ADVERTISEMENT

 

கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த கட்டுப்பாடுகள் நாளை மறுநாள் (செப்.17) முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் 2 நாள்களில் 48 மாணவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளத்தில் இருந்து வந்த 4 மாணவர்களுக்கு கரோனா இருந்த நிலையில், பிற மாணவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

இதையடுத்து கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

படிக்க உள்ளாட்சித் தேர்தல்: முதல் நாளில் 378 வேட்புமனுக்கள் தாக்கல்

உணவகங்கள், பேக்கரி கடைகளில் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சலுக்கு மட்டும் அனுமதி.

உழவர் சந்தைகளில் 50 சதவிகிதம் கடைகளுக்கு மேல் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வணிக வளாகங்கள், உணவகங்கள், துணிக்கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

கோவை மாவட்டத்தில் 82 சதவிகிதம் பேருக்கு மேல் முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

Tags : Corona covai coronavirus restriction
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT