தமிழ்நாடு

''ஜெய்ப்பூரில் ரூ.35 லட்சத்துக்கு நீட் தேர்வு வினாத்தாள்கள் விநியோகம்... இது ஒரு நாடு....'' - கமல்ஹாசன் கடும் விமரிசனம்

14th Sep 2021 02:46 PM

ADVERTISEMENT

 

நீட் தேர்வு தோல்வி பயத்தினால் தனுஷ், கனிமொழி ஆகிய மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து நடிகர் கமல்ஹாசன் வேதனை தெரிவித்துள்ளார்.

விக்கிரமங்கலம் அருகேயுள்ள சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த கருணாநிதி - ஜெயலட்சுமி ஆகியோரின் இளைய மகள் கனிமொழி , மருத்துவக் கனவினால் நீட் தேர்வு எழுதியுள்ளார். பின்னர் நீட் தேர்வில் சில கேள்விகள் கடினமாக இருந்ததாக  பெற்றோரிடம் புலம்பியுள்ளார். 

மேலும் இது நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவப் படிப்பில் சேர முடியுமா ? மருத்துவராக முடியுமா ? என்ற மன உளைச்சலில் இருந்துள்ள கனிமொழி திங்கள்கிழமை நள்ளிரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | நீட் தேர்வு எழுதியவர்களுக்கு மனநல ஆலோசனை: 104 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்

இந்த நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ஜெய்ப்பூரில் 35 லட்சம் ரூபாய்க்கு நீட் தேர்வின் வினாத்தாள்கள் விநியோகமாகிக் கொண்டிருக்க இங்கே தனுஷ், கனிமொழி போன்ற அப்பாவி மாணவர்கள் தங்கள் இன்னுயிரை நீத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இது ஒரு நாடு, இது ஒரு தேர்வு, இந்த வணிக நாடகத்தை அரங்கேற்ற ஒரு அரசு.சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்! என்று குறிப்பிட்டுள்ளார். 

 

Tags : suicide NEET neet exam Kamal Haasan Kanimozhi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT