தமிழ்நாடு

இ-அலுவலகம்: தலைமைச் செயலக ஊழியர்களுக்கு பயிற்சி தொடக்கம்

14th Sep 2021 02:42 PM

ADVERTISEMENT


தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலமாக தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் 3,645 அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. 

இந்நிகழிச்சியை நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தார். 

தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் முன்னிலை வகித்தார். 

அரசு செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கவும், காகிதப் பயன்பாட்டை குறைக்கவும், சிறந்த பணியாளர்கள் கொண்டு ஒரு திறமையான நிர்வாக அமைப்பை உருவாக்கவும், தமிழ்நாடு அரசு இ-அலுவலகம் (மின் அலுவலகம்) திட்டத்தை உருவாக்கியுள்ளது.

ADVERTISEMENT

இதையும் படிக்கலாமே.. கசிந்தது நீட் வினாத்தாள்: 8 பேர் கைது; நீட் வினாத்தாளின் விலை எவ்வளவு தெரியுமா?

தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் மற்றும் இதர அரசு அலுவலகங்களிலும் இ-அலுவலகம் நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலமாக தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் 3,645 அலுவலர்களுக்கு திறன் மற்றும் அறிவுசார் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சி 120 நாள்கள் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இ-அலுவலகத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலமாக பணியாளர்களின் பணிச்சுமை குறைவது மட்டுமல்லாமல் ஆற்றல் மிகுந்த அரசு இயந்திரத்தை உருவாக்க இயலும். இதனால் அரசு அலுவலகத்தில் கோப்புகள் கையாளுவதில் உள்ள இடர்பாடுகள் களையப்படும். பொதுமக்களுக்கு கிடைக்கும் சேவைகள் விரைந்து வழங்கப்படும் வகையில் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.
 

Tags : tn assembly palanivel thiyagarajan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT