தமிழ்நாடு

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

12th Sep 2021 03:15 PM

ADVERTISEMENT

நீலகிரி, கோயம்புத்தூா் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள தகவலில் கூறியதாவது:

தென்மேற்குப் பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோயம்புத்தூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும்

ஏனைய மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், திருப்பூா், தென்காசி ஆகிய மாவட்டங்கள் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில்  ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்

ADVERTISEMENT

செப்டம்பர் 13, 14 ஆம் தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும் உள் மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவை வால்பாறையில் 9 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: செப். 12ல் மன்னார் வளைகுடா பகுதிகளில் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

செப். 12, 14 ஆகிய தேதிகளில் வடமேற்கு வங்கக்கடல், மேற்குவங்கம், ஒடிசா கடலோரப் பகுதிகள், வட ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வாங்க கடல் பகுதிகளில் பலத்தக்காற்று வீசக்கூடும் என்பதால், இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் செல்ல வேண்டாம். 

அதுபோன்று செப். 12, 13 ஆகிய தேதிகளில் தென்கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகள் , செப். 12 முதல் 16 வரை அரபிக்கடல்  பகுதிகளிலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Tags : rain update மழை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT