தமிழ்நாடு

மாணவர் தனுஷ் தற்கொலை செய்தது வேதனை அளிக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

12th Sep 2021 12:59 PM

ADVERTISEMENT

நீட் தேர்வு அச்சத்தில் மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்டது வேதனையையும் அதிர்ச்சியையும் அளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கூழையூரைச் சேர்ந்தவர் சிவக்குமார் விவசாயி. இவரது இரண்டாவது மகன் தனுஷ்(19) மேட்டூரில் உள்ள தனியார் பள்ளியில் 2019-ஆம் ஆண்டு பிளஸ் 2 முடித்தார். 

இதையும் படிக்க | மேட்டூரில் நீட் தேர்வுக்கு அஞ்சி விவசாயி மகன் தற்கொலை

மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருந்த அவர் இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறவில்லை. இன்று ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுதுவதற்காக தயாராகி வந்த நிலையில் தேர்வு பயம் காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதுமே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ADVERTISEMENT

இந்நிலையில் இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். 'நீட் தேர்வு அச்சத்தில் மாணவன் தனுஷ் தற்கொலை செய்தது அறிந்து வேதனை அடைந்தேன். நீட் தேர்வுக்கு எதிரான நமது சட்டப்போராட்டம் இப்போது தொடங்குகிறது. மாணவர்களுக்கு நீட் தேர்வு ஏற்படுத்தும் சிரமத்தை மத்திய அரசு புரிந்துகொள்ளவில்லை. மத்திய அரசு தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யும்வரை இந்த சட்டப் போராட்டம் தொடரும். மாணவர்கள் இதுபோன்று விபரீதமான முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார். 

Tags : MKStalin tn govt
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT