தமிழ்நாடு

தமிழகத்தில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு இன்று தடுப்பூசி

12th Sep 2021 06:54 PM

ADVERTISEMENT


தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் இன்று கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவது இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 20 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டதாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் கூறினார்.

இதையும் படிக்ககரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோா் எண்ணிக்கை 73.82 கோடியைக் கடந்தது

மாலை செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியது:

ADVERTISEMENT

"தமிழகத்தில் இன்று 20 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் ஒன்றரை மணி நேரம் வரை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதன்பிறகு, அவை தரவுகளாகப் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

தமிழகத்தில் கடந்த மே மாதம் 30.78 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதன்பிறகு, படிப்படியாக தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கைகள் விழிப்புணர்வுகள் மூலம் அதிகரிக்கப்பட்டன. ஜூனில் 57 லட்சம் பேருக்கும், ஜூலையில் 67 லட்சம் பேருக்கும், ஆகஸ்டில் 92 லட்சம் பேருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்த மாதத்தில் 12-ம் தேதி வரை மட்டுமே 70 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இன்று இன்னும் 2 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டால், தமிழகத்தில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை விரைவில் 4 கோடியை எட்டும்.

தமிழகத்தில் ஒருநாளைக்கு சராசரியாக 5 முதல் 7 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தும் திறன் உள்ளது."

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT