தமிழ்நாடு

பதக்க நாயகன் மாரியப்பனுக்கு சொந்த கிராமத்தில் உற்சாக வரவேற்பு

12th Sep 2021 07:09 PM

ADVERTISEMENT


பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு அவரது சொந்த கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, கடந்த 2016-இல் ரியோ பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றார். இந்த முறை டோக்கியோவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அவரது சாதனைக்கு மத்திய அமைச்சர்கள், கிரிக்கெட் பிரபலங்கள், தமிழக முதல்வர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

இதையும் படிக்க தடுப்பூசியும் இல்லை; பரிசும் இல்லை: ஏமாற்றத்தோடு திரும்பிய மக்கள்

பிரதமர் நரேந்திர மோடி பாராலிம்பிக் வீரர்களுடன் கலந்துரையாடலும் நிகழ்த்தினார்.

ADVERTISEMENT

இந்த நிலையில், மாரியப்பன் தனது சொந்த கிராமமான பெரிய வடகம்பட்டிக்குத் திரும்பியபோது தீவட்டிபட்டி நான்கு சாலைப் பகுதியில் ஊர் மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முன்னதாக, சென்னை வந்தபோது விமான நிலையத்தில் தமிழக பாராலிம்பிக் சங்கம் சார்பில் மாரியப்பனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : mariappan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT