தமிழ்நாடு

தற்கொலை செய்துகொண்ட மாணவர் தனுஷ் உடலுக்கு இபிஎஸ் நேரில் அஞ்சலி

12th Sep 2021 01:32 PM

ADVERTISEMENT

நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவனின் உடலுக்கு சேலத்தில் எடப்பாடி கே. பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். 

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கூழையூரைச் சேர்ந்தவர் சிவக்குமார் விவசாயி. இவரது இரண்டாவது மகன் தனுஷ்(19) மேட்டூரில் உள்ள தனியார் பள்ளியில் 2019-ஆம் ஆண்டு பிளஸ் 2 முடித்தார். 

மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருந்த அவர், இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறவில்லை. 

இதையும் படிக்க | மேட்டூரில் நீட் தேர்வுக்கு அஞ்சி விவசாயி மகன் தற்கொலை

ADVERTISEMENT

இன்று ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுதுவதற்காக தயாராகி வந்த நிலையில் தேர்வு பயம் காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதுமே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், உயிரிழந்த மாணவன் தனுஷ் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இறந்த மாணவனின் உடலுக்கு எதிர்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் மாணவனின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். அப்போது மாணவனின் பெற்றோர் கதறி அழுதனர்.

இதனைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்குள் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மாணவனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளார். 

முன்னதாக, நீட் தேர்வு அச்சத்தால் மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்டது வேதனையையும் அதிர்ச்சியையும் அளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க |மாணவர் தனுஷ் தற்கொலை செய்தது வேதனை அளிக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

Tags : neet exam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT