தமிழ்நாடு

சென்னையில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

12th Sep 2021 11:16 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்த மெகா தடுப்பூசி முகாமில் தமிழகம் 40,000 மையங்களில் 20 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

சென்னையில் மட்டும் 1,600 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தும் பணிகள் காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 7 மணி வரை நடைபெறுகிறது. 200 வார்டுகளுக்கும் தலா 8 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 8 முகாம்கள் 3 அணிகளாக செயல்படவுள்ளன. காலை, நண்பகல், மாலை என்ற மூன்று பிரிவுகளாக செயல்படுகின்றன. 

சென்னையில் எந்தெந்த இடங்களில் எந்தெந்த நேரங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்பதை மண்டல வாரியாக சென்னை மாநகராட்சி இணையத்தில் வெளியிட்டுள்ளது. 

ADVERTISEMENT

https://chennaicorporation.gov.in/gcc/covid-details/mega_vac_det.jsp என்ற இணையதள முகவரியில் தங்களுக்குரிய மண்டலத்தைத் தேர்வு செய்து தடுப்பூசி போடும் இடங்களை தெரிந்துகொள்ளலாம். மேலும் அந்தந்த பகுதி தற்காலிக மாநகராட்சி பணியாளர்களின் மொபைல் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 

Tags : chennai vaccine camp
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT