தமிழ்நாடு

சென்னையில் பாரதியார் நூற்றாண்டு நினைவு நாள் நிகழ்ச்சி: முதல்வர் பங்கேற்பு

12th Sep 2021 11:03 AM

ADVERTISEMENT

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தில் மகாகவி பாரதியாரின் நினைவு நாள் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. 

இந்த நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

மகாகவி பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்

இதில் நாடு முழுவதும் கொண்டு செல்லப்பட உள்ள பாரதி சுடரை முதல்வர் ஏற்றிவைத்து வானவில் பண்பாட்டு மைய நிறுவனர் ரவியிடம் வழங்கினார். 

முன்னதாக திருவல்லிக்கேணி நினைவு இல்லத்தில் உள்ள பாரதியார் சிலைக்கு முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

ADVERTISEMENT

பாரதியார் நினைவு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை முதல்வர் பார்வையிட்டார்.

இதன்பின்னர் விழாவில் பேசிய முதல்வர், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு அடங்காதவர், அவர்களுக்கு எதிராக தன் பாடல்கள் மூலம் எதிர்ப்பை தெரிவித்தவர். பாரதியின் பாடல்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க அவரது பாடல் தொகுப்புகள் 'மனதில் உறுதி வேண்டும்' என்ற பெயரில் வடிவமைத்து மாணவர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாரதி இன்றைக்கும் தேவைப்படுகிறார்' என்று பாரதிக்கு புகழாரம் சூட்டினார். 

Tags : bharathiyar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT