தமிழ்நாடு

புதுச்சேரியில் முதன் முறையாக நியுமோகாக்கல் தடுப்பூசி: ஆளுநர், முதல்வர் தொடங்கி வைப்பு

11th Sep 2021 12:05 PM

ADVERTISEMENT

 

புதுச்சேரியில் முதன் முறையாக நியுமோகாக்கல் தடுப்பூசி செலுத்தும் பணியை, துணைநிலை ஆளுநர் தமிழிசை மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் சனிக்கிழமை தொடங்கி வைத்தனர்.

நியுமோகாக்கல் நோயானது 5-வயது உள்பட்ட குழந்தைகளுக்கு நிமோனியா, மூளைக்காய்ச்சல்,  காதுகள் பாதிப்பு ஆகியவற்றோடு இரத்தத்தில் கலக்கும் பொழுது, மிக தீவிர நோயாக மாறி குழந்தையின் உயிருக்கே ஆபத்தாக நேரலாம்.

இவ்வாறான தீவிர நோயான நீமோகாக்கல் நோய் வராமல் தடுப்பதற்காக, குழந்தைக்கு செலுத்தப்படும் தடுப்பூசியே (பிசிவி) எனும்  நீமோகாக்கல் தடுப்பூசியாகும்.

ADVERTISEMENT

புதுச்சேரியில் இத்தடுப்பூசி செலுத்தும் பணியை, எல்லைபில்லைச்சவடி பகுதியில் அமைந்துள்ள அரசு குழந்தைகள் மற்றும் மகளிர் மருத்துவமனையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை மற்றும் முதல்வர் என். ரங்கசாமி ஆகியோர்  தடுப்பூசி செலுத்தும் பணியினை சனிக்கிழமை பிற்பகல் தொடங்கி வைத்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT