தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

11th Sep 2021 01:05 PM

ADVERTISEMENT


ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம் காமராஜர் சிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் ஜெயகுமார் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சசிகுமார் முன்னிலை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் மகாலட்சுமி மாவட்ட குழு உறுப்பினர் திருமலை ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

திரிபுரா மாநிலத்தின் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் மற்றும் கட்சி தலைவர்கள் மீது கொடூரமாக தாக்கிய பாஜக குண்டர்களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இதில், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க பாலகிருஷ்ணன், நகர குழு உறுப்பினர் ரேணுகாதேவி, பிச்சைக்கனி, வீரசதானந்தம், மரிய டேவிட், ஒன்றியக்குழு உறுப்பினர் சந்தானம் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT