தமிழ்நாடு

வேதாரண்யத்தில் பாரதியார் நினைவு நூற்றாண்டு புகழஞ்சலி

11th Sep 2021 12:59 PM

ADVERTISEMENTவேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டையொட்டி அவரது உருவப் படத்துக்கு சனிக்கிழமை (செப்.11) மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தப்பட்டது.

ராஜாஜி பூங்கா எதிரே நடைபெற்ற புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு  கலை இலக்கியப் பெருமன்றத்தின் வட்டார கிளைத்  தலைவர் கவிஞர் தங்க. குழந்தைவேலு தலைமை வகித்தார். துணைத் தலைவர் நல்லாசிரியர்  வீ.வைரக்கண்ணு, தலைமையாசிரியர் சு.பாஸ்கரன், துணைச் செயலாளர் தி.செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைப்பின் நாகை மாவட்டத் தலைவர் கவிஞர் புயல் குமார் ஒன்றியப் பொருளாளர் கோவி.இராசேந்திரன், கவிஞர் குழந்தை. அசோக், ஆர்.இராமசாமி உள்ளிட்டோர்  பங்கேற்று பேசினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT