தமிழ்நாடு

'வருவாயை ஈடுகட்ட மெட்ரோ நிலையங்களுக்கு சிறிய பேருந்துகள் இயக்கத் திட்டம்'

8th Sep 2021 07:52 PM

ADVERTISEMENT

 

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு சிறிய பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை சார்பில் கொள்கை விளக்கக் குறிப்பு இன்று (செப்.8) தாக்கல் செய்யப்பட்டது.

படிக்கபேருந்து பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது: போக்குவரத்துத் துறை

ADVERTISEMENT

அதில், பயன்படுத்தப்படாமல் உள்ள 144 சிறிய பேருந்துகளை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

மெட்ரோ ரயில் பயணிகள் எண்ணிக்கை உயர்வதன் மூலம் போக்குவரத்துக் கழகத்திற்கும் வருவாய் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பேருந்துகளில் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், சிறிய பேருந்துகள் மூலம் மெட்ரோ பயணிகளைக் கவர இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

Tags : சென்னை Metro மெட்ரோ ரயில் metro train tn assembly
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT