தமிழ்நாடு

சாத்தூர் அருகே கார் கவிழ்ந்து விபத்து: சிறுமி உள்பட மூவர் பலி

8th Sep 2021 10:03 PM

ADVERTISEMENT

சாத்தூர் அருகே நான்குவழிச்சாலையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 வயது சிறுமி உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக தாலூகா காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சாரதாநகரை சேர்ந்தவர் முருகன்(48) மனைவி தனலட்சுமி (52)சண்முகவேல், மனைவி முத்துலட்சுமி(44), இவர்களின் உறவினர்கள்  ஆவுடையம்மாள்(50) இவருடைய பேத்தி சரவணப்பிரியா(9), ராமலட்சுமி (30), முத்துமாரி(33) உள்பட எட்டு பேரும் காரில் திருநெல்வேலி மாவட்டம் கயத்தாரில் உள்ள அருகே  உறவினரின் வழைகாப்பு வீட்டு நிகழ்ச்சிக்கு புதன்கிழமை சென்று விட்டு காரில் சிவகாசி நோக்கி கோவில்பட்டி-சாத்தூர் நான்குவழிச்சாலையில் வந்து கொண்டிருந்தனர்.

காரை சண்முகவேல் ஒட்டி வந்துள்ளார். நான்குவழிச்சாலையில் புல்வாய்பட்டி சந்திப்பு அருகே வந்து கொண்டிருந்த கார் கட்டுபாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி பள்ளத்தில் உருண்டது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஆவுடையம்மாள், தனலட்சுமி, சரவணப்பிரியா, முருகன், சண்முகவேல், முத்துமாரி, ராமலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திலே பலத்த காயமைடந்த நிலையில் ஆவுடையம்மாள், சரவணபிரியா, தனலட்சுமி ஆகிய மூவரும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

மேலும் காயமைடந்த முருகன்,சண்முகவேல் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராமலட்சுமி முத்துலட்சுமி,முத்துமாரி ஆகிய மூன்று பேரும் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் இந்த விபத்து சாத்தூர் தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

Tags : சாத்தூர் விருதுநகர் accident
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT