தமிழ்நாடு

பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு

8th Sep 2021 11:02 AM

ADVERTISEMENT

சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 

தமிழக சட்டப் பேரவைக் பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு துறைககளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இன்று காலை சட்டப்பேரவை கூடிய நிலையில், பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதாகக் கூறி அதிமுகவினர் அவை வெளிநடப்பு செய்தனர். 

கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் எல்லாம் முடக்கப்பட்டிருப்பதாக அதிமுக புகார் கூறியதுடன், அதுகுறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் அவை தொடங்கிய சிறிது நேரத்திலேயே வெளிநடப்பு செய்தனர். 

ADVERTISEMENT

இன்று காலை பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலத் துறை, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது.

மீண்டும் மாலை 5 மணிக்குக் கூடும் கூட்டத்தில் போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பவியல் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Tags : tn assembly ADMK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT