தமிழ்நாடு

வேளாண் பல்கலை. முதுநிலை மாணவர் சேர்க்கை: நாளை முதல் விண்ணப்பம்

7th Sep 2021 08:10 PM

ADVERTISEMENT

 

கோவை: கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை, முனைவர் பட்டப்படிப்புகளில் சேருவதற்கு புதன்கிழமை (செப். 8) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 35 துறைகளில் முதுநிலை பட்டப்படிப்புகளும், 30 துறைகளில் முனைவர் பட்டப்படிப்புகளும் நடத்தப்படுகின்றன. வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்குள்பட்ட கோவை, மதுரை, திருச்சி, குமுளூர், கிள்ளிகுளம், பெரியகுளம், மேட்டுப்பாளையம் ஆகிய கல்லூரிகளில் இந்த படிப்புகள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில் இந்த கல்லூரிகளில் 2021-2022 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை இணையதளம் வழியாக நடைபெறுகிறது. அதேபோல் நுழைவுத் தேர்வும் இணையவழியிலேயே நடைபெறும்.

ADVERTISEMENT

முதுநிலை மாணவர்கள் செப்டம்பர் 30 ஆம் தேதி வரையும், முனைவர் பட்ட மாணவர்கள் டிசம்பர் 15 ஆம் தேதி வரையிலும் தங்களது விண்ணப்பங்களை அனுப்பலாம். முதுநிலை மாணவர்களுக்கு அக்டோபர் 26 ஆம் தேதியும், முனைவர் பட்ட மாணவர்களுக்கு டிசம்பர் 24 ஆம் தேதியும் நுழைவுத் தேர்வு நடைபெறும். 

மாணவர்கள் முதுநிலை, முனைவர் பட்ட படிப்புகளுக்கான விவரங்களை https://admissionsatpgschool.tnau.ac.in என்ற இணையதளம் மூலமாக தெரிந்துகொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT