தமிழ்நாடு

ஆன்லைனில் இனி மது விற்பனை இல்லை: டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு

7th Sep 2021 03:23 PM

ADVERTISEMENT

ஆன்லைன் மூலம் மதுபானம் விற்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

மேலும், டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

மாத தொகுப்பூதியம் ரூ.500 கூடுதலாக வைத்து ஏப்ரல் 2021 முதல் உயர்த்தி வழங்கப்படும் என்றும், இதற்காக ஆண்டென்றுக்கு கூடுதலாக ரூ.15 கோடி செலவாகும் என்றும் அவர் தெரிவித்தார். 

டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

புதிதாக 1 லட்சம் விவசாய மின் இணைப்புகள்:

சட்டப்பேரவையில் மேலும் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட ரூ.1,200 கோடி மின் திட்டங்கள் நிலுவையில் உள்ளதாகக் குற்றம் சாட்டினார். 

வேளாண் உற்பத்தியை அதிகரிக்க 1 லட்சம் விவசாய மின் இணைப்புகள் புதிதாக வழங்கப்படும் என்றும் அறிவித்தார். 

தமிழகத்தில் தொழில்நுட்பம், வர்த்தக ரீதியிலான அடிப்படையில் சூரிய மின் சக்தி பூங்கா நிறுவப்படும் என்றும்,  4,000 மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம், 2,000 மெகாவாட் சேமிப்புத் திட்டத்துடன் நிறுவப்படும் எனவும் உறுதியளித்தார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT