தமிழ்நாடு

அண்ணா பல்கலை.யில் அப்துல் கலாம் சிலை: தமிழக அரசு

7th Sep 2021 11:21 AM

ADVERTISEMENT

அண்ணா பல்கலைக்கழகம் வளாகத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு சிலை வைக்கப்படும் என செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கூட்டத்தில் அமைச்சர் சாமிநாதன் வெளியிட்ட அறிவிப்பில்,

“அண்ணா பல்கலைக்கழகம் வளாகத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு சிலை வைக்கப்படும். அதேபோல், சென்னை ராணிமேரி கல்லூரி வளாகத்தில் ரவிந்தரநாத் தாகூருக்கு சிலை வைக்கப்படும்.

மேலும், மறைந்த சுதந்தர போராட்ட பெண் தியாகி அஞ்சலை அம்மாளுக்கு கடலூரில் சிலை வைக்கப்படும். சென்னை கிண்டி மண்டபத்தில் மருது சகோதரர்களுக்கு சிலை வைக்கப்படும்.

ADVERTISEMENT

கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை, கீழப்பழுவூரில் மொழியெதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த தியாகி சின்னசாமிக்கு சிலை அமைக்கப்படும். 

ரூ. 3.38 கோடி செலவில் சென்னையில் உள்ள காந்தி மண்டபம் மற்றும் காமராஜர் மண்டபம் புதுப்பிக்கப்படும்.”

இதையும் படிக்க | அரசு ஊழியர்களுக்கான பயனுள்ள அறிவிப்புகள்

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT