தமிழ்நாடு

சென்னை அருகே சித்த மருத்துவப் பல்கலைக்கழகம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

2nd Sep 2021 02:52 PM

ADVERTISEMENT

சென்னை அருகே சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் சித்த பல்கலைக்கழகம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று அறிவிப்பு வெளியிட்டார்.

இதுகுறித்து அவர் பேசியது, “ தமிழகத்தின் பழமையான மருத்துவ முறைகளாக சித்த மருத்துவத்தை போற்றும் வகையில் தனிப் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.

இந்தியாவிலேயே முதல்முறையாக சித்த மருத்துவத்திற்கு பல்கலைக்கழகம் சென்னைக்கு அருகாமையில் அமைக்கப்படும். சித்த பல்கலை.யில் இந்திய மருத்துவ முறைகளான ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மற்றும் யோகாவும் இடம்பெறும்.

ADVERTISEMENT

மேலும், தமிழகத்தில் 1,583 ஆக்ஸிஜன் படுக்கைகளுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவுகள் ரூ.266.73 கோடியில் அமைக்கப்படும் என்றார்”

ADVERTISEMENT
ADVERTISEMENT