தமிழ்நாடு

தேசத்தின் சொத்துகளை தனியாருக்கு விற்பனை செய்வது தேசிய நலன்களுக்கு எதிரானது: முன்னாள் மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்

2nd Sep 2021 09:20 PM

ADVERTISEMENT

தேசத்தின் சொத்துகளை தனியாருக்கு விற்பனை செய்வது தேசிய நலன்களுக்கு எதிரானது என்று முன்னாள் மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் தெரிவித்துள்ளார். 

சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அஸ்வினி குமார், தேசிய நலன் மற்றும் பொது நலன் காக்கும் பொறுப்பை மனதில் கொண்டு, கடந்த 67 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட இந்தியாவின் ரூ.6 லட்சம் கோடி மதிப்பிலான தேசிய சொத்துகள், மோடி அரசின், தேசிய பணமாக்கல் வழி கொள்கை, மூலம் தனியாருக்கு விற்கப்படுவதை இந்திய தேசிய காங்கிரஸ் கண்டிக்கிறது.

2022 முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான நான்கு வருட காலப்பகுதியில், பொருளாதாரத்தின் முக்கிய துறைகளை உள்ளடக்கிய தேசத்தின் அதிமுக்கிய
மதிப்புள்ள சொத்துகளை விற்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம், பொது நலன் மற்றும் அரசாங்கத்தின் நம்பகக் கடமைகளை மீறி, தங்களுக்கு நெருக்கமான சிலருக்கு பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகளை சட்டப்பூர்வமாக்க மத்திய அரசு முயல்கிறது.

ADVERTISEMENT

இந்த கொள்கை பல்வேறு நிலைகளிலும் நெருங்கிய முதலாளித்துவம் பொருளாதார பலன் அடைவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

சுட்டிக்காட்டப்பட்ட வழிமுறைகள் மூலம் தேசத்தின் சொத்துகளை அவசர அவசரமாக விற்பனை செய்வது, பின்வரும் தேசிய நலன்களுக்கு எதிரானது என்றார்.

Tags : congress
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT