தமிழ்நாடு

சென்னை புறநகர் ரயில்களில் ஆண் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட நேரக் கட்டுப்பாடுகளில் தளர்வு

2nd Sep 2021 08:13 PM

ADVERTISEMENT

சென்னை புறநகர் ரயில்களில் ஆண் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட நேரக் கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து ரயில்வேதுறை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், கரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்தியவர்களுக்கு மின்சார ரயில்களில் நேரக் கட்டுப்பாடின்றி பயணிக்காலம். 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ரிட்டர்ன், சீசன் டிக்கெட்டுகள் வழங்கப்படும். 

இதையும் படிக்க- தமிழகத்தில் இன்று மேலும் 1,562 பேருக்கு கரோனா

டிக்கெட் வாங்கும்போது 2 டோஸ் தடுப்பூசி சான்று, அடையாள அட்டை காண்பிக்க வேண்டும். தடுப்பூசி போடாதவர்கள் காலை 7 மணி முதல் 9.30, மாலை 4.30 முதல் 7 மணி வரை பயணிக்க கட்டுப்பாடுகள் தொடரும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai suburban trains
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT