தமிழ்நாடு

ஆகஸ்டில் 22.74 லட்சம் பேர் பயணம்: சென்னை மெட்ரோ

2nd Sep 2021 01:28 PM

ADVERTISEMENT


கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சென்னை மெட்ரோ ரயில்களில் சுமார் 22.74 லட்சம் பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு, கடந்த ஜூன் 21ஆம் தேதி முதல் 50 சதவீத இருக்கை வசதிகளுடன் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.

ஜூன் மாதத்தில் மட்டும் 3.55 லட்சம் பேர் பயணித்த நிலையில், ஜூலை மாதத்தில் 18.46 பேராக உயர்ந்தது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 22.74 ஆக உயர்ந்துள்ளது. இதில், அதிகபட்சமாக ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி ஒரே நாளில் 88,579 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள், அனைத்து சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலும் கடுமையாகப் பின்பற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

Tags : Chennai Metro august
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT