தமிழ்நாடு

தமிழகத்தில் கரோனா பாதிப்பு 1,562-ஆக உயா்வு

2nd Sep 2021 11:32 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் புதிதாக வியாழக்கிழமை 1,562 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை, ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இதையடுத்து, அப்பகுதிகளில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

மாநிலத்தில் இதுவரை 4.26 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 26 லட்சத்து17,943 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக கோவையில் 215 பேருக்கும், சென்னையில் 166 பேருக்கும், ஈரோட்டில் 132 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதனிடையே, மேலும் 1,684 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 66,504-ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 16,478 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 20 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,961-ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT