தமிழ்நாடு

தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை: தமிழக அரசு

30th Oct 2021 07:39 PM

ADVERTISEMENT

உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

தடைவிதிக்கப்பட்ட பட்டாசுகளை பயன்படுத்துவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மக்களின் சுகாதாரத்துக்கு குறிப்பாக, குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களின் உடல்நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவித்தது.

இதையும் படிக்க | நம்பிக்கையை தரட்டும் கிளாஸ்கோ காலநிலை மாநாடு

மேலும் இந்த உத்தரவுகளை அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் சம்பந்தப்பட்ட துறையினரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் நீதிமன்ற உத்தரவுகளை மீறும் மாநிலங்கள் கடுமையான நடவடிக்கையை எதிா்கொள்ள நேரிடும் எனவும் எச்சரித்தது.

ADVERTISEMENT

இதையும் படிக்க | முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிப்பவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட பேரியம் கலந்த பட்டாசுகள், சரவெடிகள் விற்க, வாங்க, வெடிக்க தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவை மீறுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT