தமிழ்நாடு

சிறப்புப் பேருந்துகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: ஆர்எஸ் ராஜகண்ணப்பன்

30th Oct 2021 05:57 PM

ADVERTISEMENT

 

தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்றிட 16,540 சிறப்புப் பேருந்துகளும், திரும்பி வர 17,719 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

பொதுமக்கள் எந்தவித சிரமமுமின்றி தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்குச் சென்று வர அனைத்து ஏற்பாடுகளும் தயார். என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்துத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டமானது, அமைச்சர் தலைமையில் கடந்த 11.10.2021 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், போக்குவரத்துத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு, உரிய அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

சிறப்பு ஏற்பாடுகள் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் கூறுகையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 20 ஆயிரத்து 371 பேருந்துகளில், விபத்து மற்றும் பெரும் பழுது உள்ளிட்ட தவிர்க்க முடியாத காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 37 பேருந்துகளை தவிர்த்து, மீதமுள்ள 20,334 பேருந்துகளும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இயக்கிட தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடந்த மாதம் துவங்கப்பட்ட இணையதள முன்பதிவு வாயிலாக நாளது வரையில் 72,597 நபர்கள் முன்வதிவு செய்துள்ளனர். பயணிகள் தங்களின் வசதியான பயணத்திற்கு முன்பதிவு செய்து கொண்டு பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கோயம்பேடு மற்றும் தற்காலிக பேருந்து நிலையங்களில், சிறப்புப் பேருந்துகள் இயக்க நாட்களில் எனது தலைமையில் தொடர்நது ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்பதனைத் தெரித்துக் கொள்கிறேன். 

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, வரும் 01/11/2021 முதல் 03/11/2021 வரையில், தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 3,506 சிறப்புப் பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, சென்னையிலிருயது 9,806 பேருந்துகளும், பிற ஊர்களிலிருயது மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 6,734 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,540 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

தீபாவளிப் பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் 05/11/2021 முதல் 08/11/2021 வரையில், தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,319 சிறப்புப் பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 5,000 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 17,719 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

வழித்தட மாற்றம் 

முன்பதிவு செய்துள்ள பேருந்துகள் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் கோயம்பேட்டிலிருந்து புறப்பட்டு பூந்தமல்லி, நாசரத்பேட்டை, வெளிச் சுற்றுச்சாலை வழியாக வண்டலூர் சென்றடைந்து ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தத்திற்கு சென்று தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரிலிருந்து பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கார் மற்றும் இதர வாகனங்கள்
கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து திருக்கழுகுன்றம் - செங்கல்பட்டு அல்லது ஸ்ரீ பெரும்புதூர் - செங்கல்பட்டு வழியாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முன்பதிவு வசதி
முன் பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையதள வசதியான www.tnstc.in, tnstc official app, www.redbus.in, www.paytm.com, www.busindia.com போன்ற இனையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

பயணிகளின் வசதிக்காக 24x7 கட்டுப்பாட்டு அறை

மேலும், பேருந்துகளின் இயக்கம் குறித்து அறி;eது கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக, 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை(24x7) மணி நேரமும் தொடர்பு  கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 044 24749002, 1800 425 6151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், பயணிகளின் நலன் கருதி, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும்.

பேருந்து நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள் பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள ஏதுவாக 20 இடங்களில் தகவல் மையங்கள் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மேற்கூறிய பேருந்து சேவையை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுமாறும் மேலும் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி, முகக்கவசம் அணிந்து பாதுகாப்பான முறையில் பயணம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள் பொதுமக்களின் வசதிக்காக புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்திலிருந்து (கோயம்பேடு) மேற்கூறிய 4 பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT