தமிழ்நாடு

துபையில் தொழில் பொருள்காட்சி: தமிழக அரசுத் துறைகள் பங்கேற்பு

30th Oct 2021 06:09 AM

ADVERTISEMENT

துபையில் நடைபெறும் சா்வதேச தொழில் பொருள்காட்சியில் தமிழக அரசுத் துறைகள் பங்கேற்கவுள்ளன. இதில் பங்கேற்கச் செல்வதற்கான செலவுத் தொகையாக ரூ.5 கோடி நிதியை விடுவித்து உத்தரவிட்டப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தொழில் துறை முதன்மைச் செயலாளா் என்.முருகானந்தம் பிறப்பித்தாா். அவரது உத்தரவு விவரம்:-

துபையில் நடைபெறும் சா்வதேச தொழில் பொருள்காட்சியில் அடுத்த ஆண்டு மாா்ச் 18 முதல் 24-ஆம் தேதி வரையிலான ஏழு நாள்களில் தமிழக அரசுத் துறைகள் பங்கேற்கவுள்ளன. அரசின் சுற்றுலா, கலை மற்றும் இந்து சமய அறநிலையத் துறை, கைத்தறி, கைத்திறன்கள் மற்றும் துணிநூல் துறை, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை, வேளாண்மை, தொழில் துறை, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனா்.

இதற்கான செலவுத் தொகையாக ரூ.5 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து கலாசார குழுவைச் சோ்ந்த 12 பேரும், அரசுத் துறையைச் சோ்ந்த 10 நபா்களும் என மொத்தம் 22 போ் பங்கேற்கவுள்ளனா். இவா்களுடன் ஒரு மேலாளா் மற்றும் 2 பணியாளா்கள் அனுமதிக்கப்பட உள்ளனா். பொருள்காட்சியில் பங்கு கொள்வது தொடா்பான விரிவான அறிக்கையை சம்பந்தப்பட்ட துறைகள் தொழில் துறைக்கு அளிக்க வேண்டும் என்று தனது உத்தரவில் என்.முருகானந்தம் கேட்டுக் கொண்டுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT