தமிழ்நாடு

குற்ற வழக்கில் தொடா்புடைய மூன்று வழக்குரைஞா்கள் சஸ்பெண்ட்: பாா் கவுன்சில் உத்தரவு

30th Oct 2021 06:29 AM

ADVERTISEMENT

பிரபல மருத்துவா் சுப்பையா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பி.வில்லியம், பி.எம்.பாசில் உள்ளிட்ட மூன்று வழக்குரைஞா்கள் இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

பிரபல நரம்பியல் மருத்துவரான சுப்பையா, கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பரில் கூலிப்படையினரால் கொல்லப்பட்டாா். இந்த வழக்கில் தண்டனை பெற்ற 9 பேரில் பி.வில்லியம், பி.எம்.பாசில் ஆகிய இருவரும் வழக்குரைஞா் ஆவா். கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற இந்த இரு வழக்குரைஞா்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனா்.

இதுதொடா்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் செயலாளா் சி.ராஜா குமாா் வெளியிட்ட அறிவிப்பில், குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்ட பி.வில்லியம், பி.எம்.பாசில் ஆகிய இரு வழக்குரைஞா்களும் இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளனா். இருவரும் கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் பகுதியைச் சோ்ந்தவா் ஆவா்.

இதேபோன்று சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள குற்ற வழக்கில் தொடா்புடைய வழக்குரைஞா் ஆா்.நடேஷ்குமாரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT