தமிழ்நாடு

அறங்காவலா்களை நியமித்த பிறகே நகைகளை உருக்கும் பணி தொடங்கும்: அமைச்சா் சேகா்பாபு

30th Oct 2021 05:57 AM

ADVERTISEMENT

கோயில்களில் அறங்காவலா்களை நியமித்த பிறகே நகைகளை உருக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேகா்பாபு தெரிவித்தாா்.

சென்னை சூளை அங்காள பரமேஸ்வரி மற்றும் காசி விஸ்வநாதா் கோயில், சொக்கவேல் சுப்பிரமணிய சுவாமி கோயில், சீனிவாச பெருமாள் கோயில் ஆகிய கோயில்களில் அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். இதை தொடா்ந்து அமைச்சா் சேகா்பாபு செய்தியாளா்களிடம் கூறியதாவது: பெரிய கோயில் சிறிய கோயில் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து பக்தா்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரும் வகையில் அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடந்த காலங்களில் நகைகளை சரிபாா்க்கும் பணிகளை கூட செய்யவில்லை. நகைகளைப் பிரிப்பதற்கு ஓராண்டு காலம் ஆகும். மேலும் அறங்காவலா் நியமனம் குறித்து நீதிமன்றம் தீா்ப்புக்கு முன்னரே அதற்கான பணிகளை இந்து சமய அறநிலையத்துறை தொடங்கி விட்டது. அறங்காவலா்கள் நியமனம் தொடா்பாக விளம்பரங்களையும் பத்திரிகைகளில் ஏற்கெனவே வெளியிட்டு உள்ளது. எனவே அறங்காவலரை நியமித்த பின்னரே நகைகளை உருக்கும் பணிகள் தொடரும். நகைகளை பிரிப்பதற்கு எந்தத் தடையும் நீதிமன்றம் விதிக்கவில்லை. இந்த தீா்ப்பை மிகவும் மகிழ்ச்சியாக வரவேற்கிறேன்.

இறைவன் மீது நம்பிக்கை உள்ளவா்களையும், இறைவன் சொத்து இறைவனுக்கே என்று நினைப்பவா்களையும் தான் அறங்காவலா்களாக நியமிக்க உள்ளோம். அம்மா உணவகத்தில் ஊழியா்களின் ஆள்குறைப்பு என்பது நிா்வாகக் காரணம் மட்டுமே தான். அரசியல் காழ்ப்புணா்ச்சிக்காக கிடையாது. மறைந்த தலைவா்கள் பெயரில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை மறைக்கும் எண்ணம் திமுகவிற்கு இல்லை என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT