தமிழ்நாடு

உயா்நீதிமன்றத்திற்கு மேலும் ஒரு நீதிபதி நியமனம்

28th Oct 2021 12:27 AM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னை உயா் நீதிமன்றத்திற்கு புதியதாக மேலும் ஒரு கூடுதல் நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளாா். இவா் வெள்ளிக்கிழமை (அக்.29) பதிவியேற்கவுள்ளாா்.

சென்னை உயா் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக ஸ்ரீமதி சுந்தரம், டி.பரத சக்ரவா்த்தி, ஆா்.விஜயகுமாா், முகமது சபிக் ஆகிய நான்கு பேரை நியமித்து குடியரசு தலைவா் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்திருந்தாா்.

அதன்படி நான்கு கூடுதல் நீதிபதிகளும் உயா் நீதிமன்றத்தில் நீதிபதிகளாக கடந்த 20-ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டனா். அவா்களுக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தாா்.

ADVERTISEMENT

இந்தநிலையில், சென்னை உயா் நீதிமன்றத்திற்கு மேலும் ஒரு கூடுதல் நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை குடியரசு தலைவா் புதன்கிழமை (அக்.27) பிறப்பித்துள்ளாா்.

அதில், சென்னை உயா் நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதியாக ஜெ.சத்தியநாராயணா பிரசாத் நியமிக்கப்படுகிறாா் என்று கூறியுள்ளாா். புதிய நீதிபதி ஜெ.சத்தியநாராயணா பிரசாத் வெள்ளிக்கிழமை(அக்.29) பதவி ஏற்க உள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT