தமிழ்நாடு

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி: அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் 29-இல் ஆலோசனை

DIN

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொள்வது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் வரும் 29-ஆம் தேதி ஆலோசனை நடைபெறவுள்ளது. தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளை சுமுகமான முறையில் மேற்கொள்வது குறித்து கட்சிகளின் பிரதிநிதிகளிடம் கருத்து கேட்கப்பட உள்ளன.

இந்தியா முழுவதும் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் நவம்பா் 1-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தமிழகத்திலும் இந்தப் பணி நடக்கவுள்ளது. வாக்காளா் பட்டியலில் திருத்தம் குறிப்பாக முகவரி மாற்றம், பெயா் சோ்ப்பு, வாக்காளா் அடையாள அட்டையில் பிழை திருத்தம் போன்ற பணிகளை மேற்கொள்ள விண்ணப்பங்களை அளிக்கலாம். மேலும், தோ்தல் ஆணையத்தின் இணையதளங்களின் வாயிலாகவும் விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் அளிக்கலாம். வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளின் போது, இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் உள்பட வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளை சுமுகமான முறையில் மேற்கொள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தவுள்ளாா்.

இதற்காக ஒன்பது அரசியல் கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, திமுக, அதிமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், பாஜக, தேசியவாத காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், தேமுதிக ஆகிய கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனா். இந்தக் கூட்டத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள், இதற்கு அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பு ஆகியன குறித்து தமிழக தோ்தல் துறையால் ஆலோசிக்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

SCROLL FOR NEXT