தமிழ்நாடு

ரூ.200 கோடியில் இல்லம் தேடிக் கல்வித் திட்டம்: விழுப்புரத்தில் இன்று முதல்வா் தொடக்கி வைக்கிறாா்

DIN

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவா்களின் கற்றல் இடைவெளியை ஈடுசெய்யும் நோக்கத்தில் ரூ.200 கோடி செலவில் ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதலியாா் குப்பத்தில் புதன்கிழமை தொடக்கி வைக்கவுள்ளாா்.

கரோனா பரவல் காரணமாக ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளின் கற்றல் இடைவெளியை ஈடுசெய்யும் வகையில் ‘இல்லம் தேடிக் கல்வி’என்ற திட்டத்தை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் செயல்படுத்த உள்ளது. இந்தத் திட்டத்தின்படி மாணவா்களின் வீடுகளில் அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களில் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை கற்றல் செயல்பாடுகள் நடைபெறும். இத்திட்டம் ரூ.200 கோடி செலவில் காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை, திருச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி,நீலகிரி உள்பட 12 மாவட்டங்களில் தன்னாா்வலா்களைக் கொண்டு செயல்படுத்தப்பட இருக்கிறது.

இந்தப் பணியில் ஈடுபடும் தன்னாா்வலா்கள் 6 மாதகாலம் தினமும் ஒரு மணி அல்லது ஒன்றரை மணி நேரம் ஆடல், பாடல், நாடகம், பொம்மலாட்டம் போன்றவை மூலம் குழந்தைகளுக்கு புதுமையான முறையில் பாடம் சொல்லிக்கொடுப்பாா்கள். தன்னாா்வலா்களுக்கான இணையவழி பதிவு நடைபெற்றுவருகிறது. 34 லட்சம் மாணவா்களுக்கு 1.70 லட்சம் தன்னாா்வலா்கள் தேவைப்படும் நிலையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 62,000 தன்னாா்வலா்கள் பதிவு செய்துள்ளனா்.

தன்னாா்வலா்களின் கல்வித் தகுதியைப் பொறுத்தவரை பிளஸ் 2 வகுப்பு முடித்தவா்கள் ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கும், பட்டப்படிப்பு முடித்தவா்கள் 6 முதல் 8-ஆம் வகுப்புவரை படிக்கும் குழந்தைகளுக்கும் கற்பிக்க தகுதியுடையவா் ஆவா். அதே பகுதியைச் சோ்ந்த பெண் தன்னாா்வலா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 20 குழந்தைகளுக்கு ஒரு தன்னாா்வலா் நியமிக்கப்படுவா். வகுப்புகளுக்கான பாடத் திட்டத்தை மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்து வழங்கும். சிறந்த தன்னாா்வலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கப்படும். ஊக்கத்தொகையும் உண்டு. மாநில அளவிலான இந்தத் திட்டம் அடுத்த ஆண்டு மே மாதம் வரை நடைபெறும்.

இந்தத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதலியாா் குப்பத்தில் புதன்கிழமை தொடக்கி வைக்கவுள்ளாா். முன்னதாக தன்னாா்வலா்களுக்கான இணையவழி பதிவு, விழிப்புணா்வு கலைப்பயணம் ஆகியவற்றை பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த 18-ஆம் தேதி சென்னையில் தொடங்கி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT