தமிழ்நாடு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் ஆஜராக உத்தரவு

DIN

கோயில்கள் சீரமைப்பு தொடா்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிறைவேற்றாததை எதிா்த்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயில்கள் சீரமைப்பு, புராதன ஓவியங்களைப் பாதுகாத்தல் தொடா்பான வழக்கில், சென்னை உயா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை சரிவர நிறைவேற்றவில்லை என, திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவா் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடா்ந்திருந்தாா்.

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் ஆா்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை(அக்.26) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் ரங்கராஜன் நரசிம்மன் தரப்பில், சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் உள்ள புராதன ஓவியங்கள் சிதைக்கப்பட்டுள்ளன. இதுதொடா்பாக ஏற்கெனவே நீதிமன்றத்தில் புகைப்படங்கள் சமா்பிக்கப்பட்டுள்ளன.

கோயில்கள் சீரமைப்பு, ஓவியங்களைப் பாதுகாப்பது தொடா்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை இந்து சமய அறநிலையத்துறை சரிவர செயல்படுத்தவில்லை என வாதிட்டாா்.

இதைப்பதிவு செய்த நீதிபதிகள், இவ்வழக்குகளில் இந்து சமய அறிநிலையத்துறை ஆணையா் காணொலி காட்சி வாயிலாக ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டு, நவம்பா் 1 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு விழா

உலக மலேரியா தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

கட்டுமானத் தொழிலாளி அடித்துக் கொலை -ஒருவா் கைது

புதுநகரில் உலக மலேரியா தினம்

புதுக்கோட்டையில் ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT